மோட்டார் சைக்கிளை மோதிய வாகனமோட்டி கைது!

- Sangeetha K Loganathan
- 16 Dec, 2024
டிசம்பர் 16,
தலைநகரின் Sungai Besi-Ulu Kelang Elevated Expressway (SPE) சாலையில் மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்திய Mercedes-Benz வாகனமோட்டியைக் கைது செய்துள்ளதாகக் கோலாலம்பூர் போக்குவரத்துக் குற்றப் புலனாய்வுத் துறை (JSPT) உதவி ஆணையர் Mohd. Zamzuri Mohd தெரிவித்தார்.
Chan Sow Lin சுங்கச் சாவடியிலிருந்து வெளியேறிய Mercedes-Benz ராக வாகனம் மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாகும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியது. இது தொடர்பானப் புகார் கிடைக்க பெற்றது 34 வயது Mercedes-Benz வாகனமோட்டியைக் கைது செய்ததாகவும் விபத்துக்குப் பின்னர் Mercedes-Benz வாகனம் தீ பிடித்து எரிந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து தொடர்பானக் காணொலிகளின் அடிப்படையில் Mercedes-Benz வாகனமோட்டி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கோலாலம்பூர் போக்குவரத்துக் குற்றப் புலனாய்வுத் துறை (JSPT) உதவி ஆணையர் Mohd. Zamzuri Mohd தெரிவித்தார்.
Polis menahan pemandu lelaki tempatan berusia 34 tahun selepas melanggar lari penunggang motosikal di KM 18, Lebuh Raya SPE berhampiran Plaza Tol Chan Sow Lin. Mangsa cedera parah, manakala kereta terbakar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *