டிரெய்லருடன் கோர விபத்து: தீப்பிடித்து எரிந்த எம்.பி.வி.-யில் சிக்கி ஓட்டுநர் உயிரிழப்பு

top-news

பெருவாஸ், ஜூன் 11 –

பேராக் மாநிலம் செகாரி அருகே கம்போங் செமங்காட், 9-ஆவது மைல் சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர சாலை விபத்தில், தீப்பிடித்து எரிந்த பல்நோக்கு வாகனத்தில் (MPV) சிக்கிய ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் Toyota Innova மற்றும் டிரெய்லர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலின் தாக்கத்தால் Toyota Innova திடீரென தீப்பிடித்து எரிந்தது.

பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமட் கூறுகையில், அவசர அழைப்பு கிடைத்த உடனேயே பந்தாய் ரெமிஸ் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகத் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு சென்றபோது Toyota Innova முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாகவும், சுமார் 90 சதவீத வாகனம் தீயில் கருகி சேதமடைந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

வாகனத்திற்குள் சிக்கியிருந்த ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். உடல் முழுவதுமாக எரிந்து கருகியதால், அவரது அடையாளத்தை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்