போதைப்பொருள் தாக்கத்தில் விபத்து – மூவர் பலி: லாரி ஓட்டுநர் மீது கொலை குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

சிகாமட், ஏப். 7-

போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் லாரி ஓட்டிய ஒருவர், ஐந்து பேர் பயணம் செய்த வேனை பின்புறம் மோதியதில் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இன்று மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட உள்ளார்.

சிகாமட் மாவட்ட காவல் துறை தலைவர் சூப்பிரண்டண்ட் முகமட் ஜுமாசன்சாஹிர் செக் இஸ்மாயில் தெரிவித்ததாவது, 29 வயதான சந்தேக நபர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றார்.

ஜோகூர் மாநில வழக்கறிஞர் அலுவலகத்தின் (PPN) உத்தரவின் பேரில், வழக்கை சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 44(1)க்கு பதிலாக, கடுமையான பிரிவு 302ன் கீழ் எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“சந்தேக நபருக்கு வழங்கப்பட்ட நான்கு நாள் காவல் நீட்டிப்பு இன்று (நேற்று) முடிவடைந்தது. அதனை தொடர்ந்து, மஜிஸ்திரேட் நீதிமன்றம் மேலும் இரண்டு நாட்கள் காவல் நீட்டிக்க அனுமதி வழங்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *