மேற்கு கடற்கரை விரைவுச்சாலை (WCE): மலாக்காவில் மேலும் 6 புதிய டோல் வசூலிக்கும் இடங்கள்
- Tamil Malar (Reporter)
- 09 Dec, 2025
மலாக்கா, டிச. 9-
மேற்கு கடற்கரை விரைவுச்சாலை (West Coast Expressway (WCE) திட்டத்தின் கீழ் மலாக்கா மாநிலத்தில் 69 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. இதன்னொரு முக்கிய அம்சமாக, இத்திட்டத்தில் ஆறு புதிய டோல் சாவடிகள் கட்டப்படவுள்ளன.
மாநில பொது வேலைத்துறை, உட்கட்டமைப்பு, பொது வசதிகள், போக்குவரத்து ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஹமீத் மைதீன் தெரிவிக்கையில், “இந்த ஆறு புதிய டோல்களுடன், மலாக்காவில் மொத்த டோல் எண்ணிக்கை ஒன்பதாக உயரும். தற்போது இருக்கும் மூன்று டோல்கள் – சிம்பாங் அம்பாட் (அலோர் காஜா), ஆயிர் கெரோ (மலாக்கா தெங்கா) , லிபட் காஜாங் (ஜாசின்) ஆகியவை தொடர்ந்து இயங்கும்” என்றார்.
புதிய டோல்கள் மக்கள் தொகை அடர்த்தி, போக்குவரத்து தேவை, மலாக்காவுக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



