கார்டெல் மோசடிகளை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பும் வெகுமதியும் – MyCC அறிவிப்பு
- Surendran Sumdraraj
- 29 Sep, 2026
கோலாலம்பூர், செப். 29-
கார்டெல் நடவடிக்கைகள் மற்றும் டெண்டர் மோசடிகள் தொடர்பான தகவல்களை வழங்க முன்வருபவருக்குக் கூடுதல் பாதுகாப்பும் வெகுமதியும் வழங்க மலேசிய போட்டித்துறை ஆணையம் (MyCC) நடவடிக்கை எடுக்கவுள்ளது.
2010 போட்டித்துறைச் சட்டம் [சட்டம் 712] மற்றும் 2010 மலேசிய போட்டித்துறை ஆணையச் சட்டம் [சட்டம் 713] ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களைத் தொடர்ந்து இந்த புதிய அணுகுமுறை அமல்படுத்தப்படவுள்ளது.
MyCC தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ இஸ்கண்டர் இஸ்மாயில் கூறுகையில், கார்டெல் நடவடிக்கைகள் பெரும்பாலும் ரகசியமாகவும், வெளிப்படையாக தெரியாத வகையிலும் மேற்கொள்ளப்படுவதால், நிறுவனங்கள் அல்லது நுகர்வோருடன் தொடர்புடைய நபர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் விசாரணைக்கு மிகவும் அவசியம் என்றார்.
“முன்னதாகவும் தகவல் வழங்குவோருக்கான பாதுகாப்பு இருந்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை. இப்போது பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், தகவல் வழங்குவோருக்கு வெகுமதியும் வழங்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



