பெர்சத்து உறுப்பினர்கள் அம்னோவில் இணைய வாய்ப்பு - ஆய்வாளர்கள்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 24-

பெர்சாட்டு (Bersatu) கட்சியின் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக, அதன் அடித்தள உறுப்பினர்கள் மற்றும் நடுத்தர நிலை தலைவர்கள் UMNO-வுக்கு திரும்பும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக தான் ஸ்ரீ முகிதீன் யாசின் மற்றும் டத்தோ ஸ்ரீ ஹம்சா இடையிலான சமீபத்திய மோதல் இந்த மாற்றத்திற்கு காரணமாகக் கருதப்படுகிறது.

பேராசிரியர் டத்தோ டாக்டர் அவாங் அஸ்மான் அவாங் பாவி, பெர்சத்து தற்போது அரசியல் வலிமையை இழந்து வருவது இந்த நிலைமையை உருவாக்கியதாகத் தெரிவித்தார். முன்பு UMNO-வை விட வலிமையான மற்றும் நிலையான கட்சியாக பெர்சத்துவை அடித்தள உறுப்பினர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இப்போது பெர்சத்து புத்ராஜெயாவில் ஆட்சியில் இல்லாததுடன், உள்கிளர்ச்சியால் பலவீனமடைந்துள்ளது.

இதேவேளை, ஹம்சா தலைமையில் உருவாகும் எனக் கூறப்படும் (PKM) கட்சி இன்னும் நிலைநிறுத்தப்படாததாலும், அதற்கு உறுதியான அரசியல் ஆதரவு இல்லை என்பதும் குறிப்பிடப்படுகிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *