போர்ட்டிக்சன் கடலில் மூழ்கி 20 வயது இந்திய இளைஞர் பலி!
- Sangeetha K Loganathan
- 31 Jan, 2025
ஜனவரி 31,
போர்டிக்சன் சுற்றுலா கடற்கரையான Pantai Batu 2 கடலில் குளித்துக் கொண்டிருந்த ஆடவர் திடீரெனக் கடலில் மூழ்கிய நிலையில் இன்று அதிகாலை 1 மணிக்குச் சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்தவர் கிள்ளானைச் சேர்ந்த 20 வயது M R Vishhvaruben என அடையாளம் காணப்பட்டுள்ளதாக Teluk Kemang மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Kamal Mohd Timar தெரிவித்தார்.
கரையிலிருந்து சுமார் 60 மீட்டர் தூரத்தில் நீச்சலிடித்துக் கொண்டிருந்த நிலையில் கடலில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. அவர் மூழ்கிய பகுதியிலிருந்து 250 மீட்டர் தொலைவில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
Seorang pemuda bernama M R Vishhvaruben, 20 tahun lemas ketika mandi di Pantai Batu 2, Port Dickson. Mayatnya ditemui 250 meter dari lokasi dia dilaporkan tenggelam. Insiden berlaku malam tadi dan mayatnya ditemui awal pagi ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



