வாகனத்தின் அடியில் சிக்கி 21 வயது இளைஞர் பலி!

- Sangeetha K Loganathan
- 22 Dec, 2024
டிசம்பர் 22,
இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளபதில் சாலையில் விழுந்த இளைஞர் மீது வாகனம் ஏறியதில் வாகனத்தின் அடியில் சிக்கிய 21 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நண்பகல் 12.20 மணிக்கு இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பைப் பெற்றதாக Tunjung மாவட்ட மீட்பு ஆணைய அதிகாரி Azhar Ismail தெரிவித்தார். வாகனத்தின் அடியில் சிக்கியிருந்த இளைஞரின் உடலை மீட்க சிரமமாக இருந்ததாகவும் வாகனத்தை இரண்டாக வெட்டி, இளைஞரின் உடலை மீட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் 21 வயது Muhammad Afiq Zakwan Mohd Arif என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டியும் 58 வயதான வாகனமோட்டியும் எந்தவொரு காயமுமின்றி தப்பினர்.
Pemuda, Muhammad Afiq Zakwan (21), maut tersepit bawah kereta selepas kemalangan melibatkan dua motosikal dan kereta di Dewan Beta. Penunggang motosikal lain cedera ringan, pemandu kereta selamat. Bomba menggunakan peralatan khas untuk mengeluarkan mangsa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *