Mummy போல வேடமிட்டு அச்சுறுத்திய இளைஞர் கைது!

- Sangeetha K Loganathan
- 21 Jan, 2025
ஜனவரி 21,
Sungai Besar சாலையில் mummy போல உடல் முழுவதும் வெள்ளை துணியால் சுற்றி சாலையில் ஆடவர் ஒருவர் நடந்து செல்லும் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து Sabak Bernam காவல் துறையினர் 25 வயது இளைஞரைக் கைது செய்துள்ளதாக Sabak Bernam மாவட்டக் காவல் ஆணையர் Robin Guha Thakurta தெரிவித்தார்.
நேற்று காலை 10 மணியளவில் Sungai Besar பகுதியில் உள்ள Jalan Panchang Bedena சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். Tengku Ampuan Jemaah மருத்துவமனையில் கைது செய்யப்பட்ட ஆடவருக்குச் சுகாதாரப் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அறியப்படுவதாக Robin Guha Thakurta தெரிவித்தார்.
Seorang pemuda berusia 25 tahun ditahan polis Sabak Bernam selepas menyamar sebagai "mummy" dengan membalut tubuhnya menggunakan kain putih dan berjalan di Jalan Panchang Bedena, Sungai Besar. Pemuda itu disahkan mempunyai masalah kesihatan mental.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *