ஒற்றுமை அரசாங்கம் உருவான பிறகும் பிஎச் - பிஎன் இளைஞர் அணிகள் சந்தித்ததில்லை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 12 –

2022 ஆம் ஆண்டு ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து, பக்காத்தான் ஹரப்பான் (PH) மற்றும் பாரிசான் நேஷனல் (BN) இளைஞர் அணிகளுக்கிடையில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ சந்திப்போ அல்லது கூட்டமோ நடைபெறவில்லை என்று பக்காத்தான் ஹரப்பான் இளைஞர் தலைவர் வூ கா லியோங் தெரிவித்துள்ளார்.

டிஏபி சோசலிஸ்ட் இளைஞர் அமைப்பின் (DAPSY) தலைவருமான அவர், மத்திய அளவில் இரு கூட்டணிகளும் இணைந்து செயல்பட்டு வந்தாலும், இளைஞர் அணிகள் தனியாக கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை என்று கூறினார்.

ஒற்றுமை அரசாங்கம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்கள் அனைத்தும் கட்சிகளின் உயர்மட்டத் தலைமைகள் வழியாகவே நடைபெற்று வருவதாகவும், அதுவே தற்போதைக்குப் போதுமானதாக இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *