AYER KUNING சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்னோவின் இளைஞர் போட்டியிடுவார்! – AKMAL SALEH திட்டவட்டம்!

top-news

பிப்ரவரி 26,


பேராக்கின் AYER KUNING சட்டமன்ற உறுப்பினர் Ishsam Shahruddin மரணமடைந்ததைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் AYER KUNING சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்னோ இளைஞரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh வலியுறுத்தியுள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் அம்னோ வேட்பாளரான Ishsam Shahruddin 2,213 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற நிலையில் ஒற்றுமை கூட்டணியின் ஒப்பந்தத்தின்படி அம்னோ தனது வேட்பாளரை நிறுத்துமென முடிவாகியதும் அம்னோவின் இளைஞர் பகுதியிலிருந்து வேட்பாளரை நியமிக்கும்படி Datuk Dr Muhamad Akmal Saleh வலியுறுத்தியுள்ளார்.

அம்னோவில் அடுத்த கட்ட தலைவர்களை உருவாக்கும் முன்னெடுப்பாக AYER KUNING சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்னோவின் இளைஞர் பிரிவு, புத்ரா அல்லது புத்ரி பிரிவினர் போட்டியிட வேண்டும் என அவர் தெரிவித்தார். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் கட்சியாக அம்னோ கடந்த இடைத்தேர்தல்களில் நிரூபித்திருக்கும் நிலையில் AYER KUNING சட்டமன்ற இடைத்தேர்தலிலும் நிரூபிக்கும் என தாம் நம்புவதாக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh தெரிவித்தார்.

Datuk Dr Muhamad Akmal Saleh menegaskan bahawa Pemuda UMNO perlu diberi peluang bertanding dalam PRK DUN Ayer Kuning. Beliau menyatakan ia selaras dengan usaha melahirkan pemimpin baharu dan meneruskan tradisi kemenangan UMNO di kawasan tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *