மலாக்கா மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பானுடன் கூட்டணி வேண்டாம் – அம்னோ இளைஞர் பிரிவு

top-news

கோலாலம்பூர், செப். 10 –

வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள பக்காத்தான் ஹராப்பானைக் கூட்டணி பங்காளியாக அறிவிக்க வேண்டாம் என்று அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் முகமது அக்மல் சாலே, கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, அம்னோ தனது அரசியல் முடிவுகளை மிகுந்த விவேகத்துடன் மேற்கொண்டு, மலாய் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மலாக்கா மாநிலத் தேர்தலை ‘உம்மா ஒற்றுமை’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு தளமாக மாற்ற வேண்டும் என்றும், இதன் மூலம் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நம்பிக்கையை மீண்டும் வலுப்படுத்த முடியும் என்றும் அக்மல் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியின் அடித்தள உறுப்பினர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும், அந்த உணர்வுகளை கட்சித் தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்