RM 66,212 மதிப்பிலானப் போதைப்பொருளுடன் மூவர் கைது!

- Sangeetha K Loganathan
- 07 Jan, 2025
ஜனவரி 7,
தெலுக் இந்தானில் உள்ள வணிகத் தளத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 உள்ளூர் ஆடவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். நண்பகல் 2.20 மணியளவில் சந்தேகத்திற்குரிய மூவர் வாகனத்தில் பொட்டலங்களை அடுக்கும் போது கையும் கலவுமாகச் சிக்கியதாக Hilir Perak மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Adnan Basri தெரிவித்தார்.
அவர்களின் வாகனத்திலிருந்து RM 66,212 மதிப்பிலானப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட மூவரும் methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் தெரிய வந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள் மீது முன்னமே 12 போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் Hilir Perak மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Adnan Basri தெரிவித்தார்.
Tiga lelaki ditahan di Teluk Intan kerana terlibat dalam aktiviti jual beli dadah. Polis merampas dadah bernilai RM66,212, dan ketiga-tiga suspek didapati positif methamphetamine dengan 12 kes berkaitan dadah masih dalam siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *