யமாலின் கடைசி நேர பெனால்டி: நியூகாஸலுடன் பார்சிலோனா சமநிலை

top-news
FREE WEBSITE AD

நியூகாஸல், மார்ச் 11-

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றின் முதல் கட்டப் போட்டியில் பார்சிலோனா, நியூகாஸல் யுனைடெட்டுடன் 1-1 என சமநிலையைப் பதிவு செய்து தோல்வியிலிருந்து தப்பியது.

போட்டியின் 86-ஆவது நிமிடத்தில் ஜேகப் முர்பியின் குறுக்கு பந்தை ஹார்வி பார்ன்ஸ் கோலாக மாற்றினார். இதனால் நியூகாஸல் அணி வெற்றிக்கு அருகில் சென்றது.

ஆனால் செயின்ட் ஜேம்ஸ் பார்க் மைதானத்தில் இருந்த ரசிகர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கூடுதல் நேரத்தின் நான்காவது நிமிடத்தில் டானி ஒல்மோவை பெனால்டி பகுதியில் மாலிக் தியாவ் தள்ளியதால் பார்சிலோனாவுக்கு பெனால்டி வழங்கப்பட்டது.

அந்த வாய்ப்பை 18 வயதான லமின் யமால் அமைதியாக கோலாக மாற்றி, கோல் கீப்பர் ஆரன் ராம்ஸ்டேலை வீழ்த்தினார். இதன் மூலம் பார்சிலோனா முக்கியமான சமநிலையைப் பெற்றது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *