கணவரைத் தாக்கிய மனைவிக்கு RM 10,000 நிபந்தனை ஜாமீன்!

top-news

மார்ச் 4,


சிரம்பானில் கணவரைத் தாக்கியதாக நம்பப்படும் 40 வயது பெண் தன் மீதானக் குற்றத்தை மறுத்து நீதிமன்ற விசாரணையைக் கோரிய நிலையில் அவருக்கு Sesyen நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்ததுடன் ஏப்ரல் 14 விசாரணையை ஒத்திவைத்தது. 

கடந்த பிப்ரவரி 26 அதிகாலை 5 மணியளவில் சிரம்பானில் உள்ள Taman Iringan Bayu குடியிருப்புப் பகுதியில் 31 வயதான Muhammad Danial Zafri Zairi எனும் தனது கணவரைத் துடைப்பம், கத்தி, எடைக்கல் போன்றவற்றால் சரமாரியாகத் தாக்கியதாக 40 வயது Sharifah Nurul Ainnasama Syed Omar எனும் சிகையலங்கார நிபுணர் கைது செய்யப்பட்டார். தன்மீதானக் குற்றத்தை மறுத்த அவர் நீதிமன்ற விசாரணையைக் கோரிய நிலையில் அவருக்கு நீதிபதி Datin Surita Budin RM 10,000 நிபந்தனை ஜாமினுடன் பாஸ்போர்ட்டைக் காவல்நிலையத்தில் ஒப்படைக்கும்படியும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் உத்தரவிட்டார். 

Seorang pendandan rambut di Seremban mengaku tidak bersalah di Mahkamah Sesyen atas pertuduhan mencederakan suaminya menggunakan penyapu, pemberat, dan pisau. Mahkamah membenarkan jaminan RM10,000 dan menetapkan 14 April untuk sebutan semula kes.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *