மின்கழிவு மேலாண்மைக்கு தொடர்ச்சியான கல்வி அவசியம்

top-news

கோலாலம்பூர், பிப். 15-

நாட்டில் அதிகரித்து வரும் மின்சாதன கழிவுகளை (e-waste) முறையாக கையாள பொதுமக்களுக்குத் தொடர்ச்சியான மற்றும் நடைமுறை சார்ந்த கல்வி வழங்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பான சமூக இணைப்பின் தலைவர் டான் ஸ்ரீ லீ லாம் தாய் வலியுறுத்தினார்.

மக்கள் மத்தியில் சரியான அகற்றும் முறைகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் குறைவாக இருப்பதால், ஒருமுறை மட்டும் நடத்தப்படும் பிரச்சாரங்கள் போதுமானதல்ல என்று அவர் கூறினார். சுற்றுச்சூழல் துறை (JAS) நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சேகரிப்பு மையங்களை அமைத்திருந்தாலும், அவற்றின் பயன்பாடு திருப்திகரமாக இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

“மக்கள் எங்கு கொண்டு செல்ல வேண்டும், ஏன் பாதுகாப்பான முறையில் ஒப்படைக்க வேண்டும் என்பதைக் குறித்து தெளிவான வழிகாட்டுதல் தேவை. அதற்காக தொடர்ந்து நடைமுறை விளக்கங்கள் வழங்கப்பட வேண்டும்,” என்றார்.

தவறான முறையில் மின்கழிவுகளைக் கைவிடுவது சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்துக்கும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பள்ளிகள் மாற்றத்தை உருவாக்கும் முக்கிய தளமாக அமைய முடியும். தினசரி கற்றல் நடவடிக்கைகளில் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை இணைத்தால், எதிர்கால தலைமுறையில் நல்ல பழக்கங்கள் உருவாகும் என்றார்.

இந்த முயற்சி வெற்றியடைய அரசு, தனியார் துறை மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *