விஷ்ணுபதி புண்யகாலம் என்றால் என்ன?
- Tamil Malar (Reporter)
- 13 Feb, 2026
உத்திராயண புண்யகாலம், தட்சிணாயன புண்யகாலம் என்பது போல் விஷ்ணுபதி புண்யகாலம் என்று ஒன்றும் இருக்கிறது. இது பரவலாக அறியப்படாத ஒன்று என்றே சொல்லலாம். ஒரு வருடத்தில், வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை1 மற்றும் மாசி 1 இந்த நாலு நாட்களும் விஷ்ணுபதி புண்ணிய கால நாட்களாக சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த நாளில் அதிகாலை 1.30 மணியிலிருந்து 10 மணிக்குள் யார் பெருமாள் கோவிலுக்கு சென்று மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதை நாம் சரிவர உபயோகப்படுத்தி ஸ்ரீ மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்தால் பொருளாதாரம் மேம்படும், வாழ்வில் ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் தீரும்.
ஸ்ரீ விஷ்ணுபதி பூஜை என்பது அனைவராலும் அறியாத குறிப்பாக வைணவர்களே அறியாத, நடந்து வந்த ஒரு பாரம்பரியம் மிக்க புராதான பூஜை ஆகும். தினசரி நாள் காட்டி பஞ்சாங்கங்களிலும் இது குறித்த விவரம் இருந்தும் அறியாமலே இருந்து வருகிறோம்.
சிவன் சந்ததியில் பிரதோஷம் என்ற சிறப்பு மிக்க பூஜையைப் போல விஷ்ணு சன்னதியில் நடத்தப்படும் பூஜை இது. விஷ்ணு எனில் காக்கும் தெய்வம். பதி என்றால் பூமியில் பதிவது ஆக விஷ்ணு அவதாரங்கள் பூமியில் பதியும் நிகழ்வை ஒட்டி நடத்தப்படும் பூஜை.
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கோபம், ஈகோ முதலியவற்றின் காரணமாகத் தோன்றும் பிரச்னைகளை எல்லாம் தீர்க்கும் அருமருந்தாக இந்த விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு திகழ்கிறது.
மனித வாழ்வில் பிரச்னைகள், நாம் செய்த முன்வினை காரணமாக உருவாகிக்கொண்டேயிருக்கும். அதிலிருந்து விடுபட்டு நற்பயன்களை அடைய இறைவழிபாடு மிகவும் அவசியம். இறைவனை வழிபடப் பல சுப நாள்களை நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நாள்களைப் புண்ணியகாலங்கள் என்று அழைத்தார்கள். புண்ணியகாலங்கள் மொத்தம் மூன்று. அவை விஷூ புண்ணியகாலம், ஷடசீதி புண்ணியகாலம், விஷ்ணுபதி புண்ணியகாலம் என்று அழைக்கப்படும்
வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ணியகாலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை.
சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷூப் புண்ணியகாலமாகும். இவை பிரம்மாவை வழிபட உகந்தவை. ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி முதலிய மாதங்களின் முதல்நாள் ஷடசீதி புண்ணிய காலம். இவை சிவனை வழிபட உகந்தவை.
ஏகாதசிக்கு இணையான இந்தப் புண்ணியகாலத்தில் விஷ்ணுவை வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். இந்தப் புண்ணிய காலத்தில் செய்யப்படும் விஷ்ணு வழிபாடு மிகவும் பலன் அளிக்கக் கூடியது.
இன்று குடும்பங்களில் பிரச்னைகள் மிகுந்து அமைதியில்லாத சூழல் நிலவுகிறது. குறிப்பாகக் கணவன் மனைவிக்கிடையே பிரச்னைகள் தோன்றி இனிக்க வேண்டிய இல்வாழ்க்கை வெறுக்கத் தொடங்கிவிடுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கோபம், ஈகோ முதலியவற்றின் காரணமாகத் தோன்றும் பிரச்னைகளை எல்லாம் தீர்க்கும் அருமருந்தாக இந்த விஷ்ணுபதி புண்ணியகாலம் திகழ்கிறது.
விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக சங்கு சக்ரதாரியாகப் பெருமாள் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளை வழிபட வேண்டியது அவசியம். இந்தப் புண்ணிய காலத்தில் பெருமாள் சந்நிதியை 27 முறை பிரதட்சிணம் வருவது விசேஷம். ஆலயங்களில் இந்த நாளில் நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு வழிபாடு செய்ய மனம் அமைதி பெறும்.
இந்த நாளில் மகாலட்சுமி பூஜை, கோபூஜை ஆகியன செய்வது மிகவும் பலன் தரும். வீடுகளில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் மிகுதியான பலன்களைக் கொடுக்கும். திருமண வரம் வேண்டும் இளைஞர்கள் தவறாமல் இந்த நாளில் ஆலயம் சென்று வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
கும்ப சங்கராந்தி என்று போற்றப்படும் இந்த நாளில் நதிக் கரைகளிலும் சமுத்திரக் கரைகளிலும் சென்று நீராடி வழிபட சகல பாவங்களும் விலகி நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை.
அதிகாலை 1.30 முதல் காலை 10.30 வரை வழிபடும் நேரமாகும்.
ஒவ்வொரு சுற்றின் போதும் ஒவ்வொரு பூவைக் கொடிமரத்தில் வைத்த பின் தாயாரையும், விஷ்ணுவையும் தியானித்த பின் குறைகளை மனமுருகி சொல்ல வேண்டும். ஆக 27 முறை. நினைவிருக்கட்டும் நாளில் அதிகாலை 1.30 மணியிலிருந்து 10 மணிக்குள் யார் பெருமாள் கோவிலுக்கு சென்று மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதை நாம் சரிவர உபயோகப்படுத்தி ஸ்ரீ மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்தால் பொருளாதாரம் மேம்படும், வாழ்வில் ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் தீரும்.
காலை 10 மணி வரை விஷ்ணுபதி புண்யகாலம் இருப்பதால் காலையில் சீக்கிரமாகவே கோவிலுக்குச் சென்று 10 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து முடித்து விடலாம். இந்த வழிபாட்டை செய்ய ஏதாவது ஒரு குறிப்பிட்ட முறை இருக்கிறதா?
ஆமாம்! கையில் 27 பூக்களை எடுத்துச் செல்ல வேண்டும். எந்த வகையான பூவாக இருந்தாலும் சரி. பெருமாளின் கருவறையை கொடிமரத்தோடு சேர்த்து 27 முறை வலம் வர வேண்டும். அந்த எண்ணிக்கை தவறாமல் இருப்பதற்காகதான் 27 மலர்கள். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் ஒரு பூவை கொடிமரத்தின் பாதத்தில் போட வேண்டும். பிரதட்சணம் முடித்து பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தலாம். அர்ச்சனை செய்யலாம்.
27 முறை பெருமாளை வலம் வரும்போது உங்களுக்குத் தெரிந்த பெருமாள் ஸ்லோகங்களை சொல்லலாம். இல்லாவிடில் வெறுமனே "நாராயணா, நாராயணா!" என்று சொல்லியபடியே கூட பிரதட்சணம் செய்யலாம். வியாபாரத்திலும், செய்யும் வேலையிலும் சீக்கிரம் முன்னேற்றம் அடைய வேண்டும், காரியத் தடை விலக வேண்டும் என்று நினைப்பவர்கள், "ஓம் அனிருத்ரனே நமஹ!" என்று சொல்லி பிரதட்சணம் செய்யலாம்.
வீட்டில் நோய் நொடி பிரச்சினை என்றால், பெருமாளை விஷ்ணுபதி புண்ய காலத்தில் "ஓம் அச்சுதாய நமஹ! ஓம் அனந்தாய நமஹ! ஓம் கேசவாய நமஹ!" என்று துதித்து வழிபடுங்கள். இது எதையும் உச்சரிக்க இயலாதவர்கள் "கோவிந்தா! கோவிந்தா!" என்று சொல்லி பிரதட்சணம் செய்து உங்கள் வேண்டுதலை பெருமாளிடம் சொன்னாலும் நிச்சயம் அது பலிக்கும்.ஏகாதசி விஷ்ணுவிற்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதே போல இந்த விஷ்ணுபதி புண்ய காலமும் மிகவும் சிறப்பு பெற்ற புனிதமான நாளாகும். வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. இந்த விஷ்ணுபதி புண்யகால வழிபாடு பல ஏகாதசிகளில் வழிபாடு செய்வதற்கு சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது பரவலாக அறியப்படாத ஒரு வழிபாடாகவே இருந்து வருகிறது. வருடத்தில் வரும் நான்கு விஷ்ணுபதி புண்யகாலத்திலும் நாம் தொடர்ந்து பெருமாளை வழிபாடு செய்து வரும்போது பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படும், செல்வ செழிப்பான வளமான வாழ்க்கை அமையும்.
இன்று (13/2/26) வெள்ளிக்கிழமை விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பதால் அருகில் இருக்கும் பெருமாள் அல்லது விஷ்ணு ஆலயங்களில் சென்று வழிபாடு செய்யுங்கள்.விஷ்ணுபதி வழிபாடு செய்து வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவோம்.
:- லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



