மலாக்கா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படுமா?

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, செப். 22-

மலாக்கா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று நண்பகல் 12 மணிக்கு மாநில ஆட்சிக்குழு கூட்டமும், பிற்பகல் 2 மணிக்கு அதனைத் தொடர்ந்து ‘போஸ்ட் எக்ஸ்கோ’ கூட்டமும் நடைபெறுகின்றன. இதன் பின்னர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்களின்படி, மலாக்கா மாநில ஆளுநர் துன் முகமது அலி முகமது ருஸ்தாம், மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *