விவசாயத்தில் மோசடி! FELDA அதிகாரி கைது! – SPRM
- Sangeetha K Loganathan
- 23 Jan, 2025
ஜனவரி 23,
விவசாய மேம்பாட்டுக்கான நிதி மோசடியில் சம்மந்தப்பட்டுள்ளதாக FELDA அதிகாரி ஒருவரை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைது செய்துள்ளது. கூலாய் மாவட்டத்தின் விவசாய நிலம் மேம்பாடு தொடர்பான ஊழல் என முன்னதாகச் செய்திகள் வெளிவந்தது.
நேற்று மாலை 7 மணியளவில் ஜொகூர் மாநில SPRM அலுவலத்தில் அதிகாரி மீது விசாரணை நடத்தப்பட்ட நிலையில் Jawatankuasa Kemajuan Rancangan (JKKR) எனும் திட்டமிடல் மேம்பாட்டுப் பிரிவின் மூலமாக RM10,000 ரிங்கிட்டுக்கும் மேலான நிதி மோசடிகள் புரிந்திருக்கும் வழக்கின் விசாரணைக்காக 43 வயது அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய இயக்குநர் Datuk Azmi Alias தெரிவித்தார்.
SPRM Johor menahan seorang pengurus Felda di Kulai kerana disyaki menyalahgunakan kuasa sebagai Pengerusi JKKR. Suspek dituduh menyeleweng lebih RM10,000 dari Tabung Ladang dan Jalan Pertanian untuk kepentingan peribadi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



