வணிகக் கடையை மோதிய கார்! கடை உரிமையாளர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 02 Feb, 2025
பிப்ரவரி 2,
கட்டுப்பாட்டை இழந்த MYVI கார் சாலையோர உணவுக் கடையை மோதியதில் 42 வயது கடை உரிமையாளர் படுகாயம் அடைந்தார். நேற்று இரவு 9.30 மணியளவில் ஜெராண்டூட்டில் உள்ள Bandar Inderapura சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக Jerantut, மாவட்டக் காவல் ஆணையர் Zukri Muhammad தெரிவித்தார்.
விபத்துக்குக் காரணமான MYVi வாகனமோட்டிக்குத் திடீரென வலிப்பு வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கடையை மோதியதாகவும், கடையின் உரிமையாளர் ஜெராண்டூட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Zukri Muhammad தெரிவித்தார். இது தொடர்பாக மைவி கார் ஓட்டுநரான 22 வயது இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Seorang peniaga nasi lemak cedera selepas kereta yang dipandu wanita mengalami sawan merempuh kedainya di Jerantut. Wan Azmi, 42 tahun cedera di bahu sementara wanita itu pengsan dan dirawat di hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *