மதுபோதையில் ஓட்டும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அவசியம் – பாப்பராயுடு வலியுறுத்தல்
- Surendran Sumdraraj
- 30 Mar, 2026
ஷா ஆலம், மார்ச் 30-
மதுபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனம் ஓட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்த அதிகபட்ச சிறைத்தண்டனை போன்ற கடுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக் குழு உறுப்பினர் வி.பாப்பராயுடு தெரிவித்துள்ளார்.
தற்போதைய சட்ட நடவடிக்கைகள் குற்றவாளிகளுக்குப் போதுமான பாடமாக அமையவில்லை என்றும், இதனால் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, நேற்று கிள்ளான் ஜாலான் ராயா பாராட் பகுதியில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், கடுமையான தண்டனைகள் மூலம் மட்டுமே இத்தகைய ஆபத்தான செயல்களைத் தடுக்க முடியும் என்றும், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



