சிலாங்கூர் மாநிலத் தமிழ்மொழி உதவி இயக்குநராகத் திருமதி.விஜயலெட்சுமி நியமனம்!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 17,

சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் புதிய உதவி இயக்குநராகத் திருமதி விஜயலெட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் மாணவர் நலத் துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த திருமதி விஜயலெட்சுமி சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் முதல் பெண் தமிழ்மொழி உதவி இயக்குநர் எனும் வரலாற்றையும் பெற்றுள்ளார். தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடத்திட்டத்தின் தரம், இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியின் தர மேம்பாடுகள் ஆகியவற்றைச் செயல்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும் கல்வி இலாகாவில் இந்த தமிழ்மொழி உதவி இயக்குநர் பொறுப்புகள் உள்ள நிலையில் சிலாங்கூரில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் தமிழ்க்கல்வியை மேம்படுத்தும் பொறுப்பைத் திருமதி விஜயலெட்சுமி பெற்றுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *