ஜப்பான் ரசிகர்களின் ஒழுக்கம் உலக பாராட்டு பெற்றது

top-news
FREE WEBSITE AD

லண்டன், ஏப். 2-

ஜப்பான் அணியின் ரசிகர்கள், போட்டி முடிந்ததும் தாங்கள் அமர்ந்திருந்த பகுதிகளைச் சுத்தம் செய்த நடவடிக்கைக்காக உலகளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.

Wembley Stadium அரங்கில் நடைபெற்ற அனைத்துலக நட்பு போட்டியில், ஜப்பான் அணி 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி, அணியின் சிறந்த ஒற்றுமை மற்றும் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தியது.

முதல் பாதியில் மீதோமா அடித்த கோல் போட்டியின் முடிவை தீர்மானித்தது. அதே சமயம், இங்கிலாந்து அணி பல முயற்சிகள் எடுத்தும் ஜப்பான் அணியின் வலுவான பாதுகாப்பைக் கலைக்க முடியாமல் தவித்தது.

இந்த தோல்வி, அணியின் மேலாளர் தோமஸ் துச்சலுக்கு உலகக் கோப்பைக்கு முன்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

போட்டியை நேரில் கண்ட ஜப்பான் ரசிகர்கள், அரங்கத்தை விட்டு வெளியேறும் முன் தங்களது அமர்வு பகுதியைச் சுத்தம் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர்களின் ஒழுக்கம், மரியாதை மற்றும் பொது பொறுப்புணர்வு உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இது, விளையாட்டு என்பது வெறும் போட்டி மட்டுமல்ல; பண்பாடு மற்றும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தும் ஒரு மேடையாகும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *