கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர்: திருமாவளவன் கருத்து

top-news
FREE WEBSITE AD


தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் முடிவுகள், மாநில மக்களின் அரசியல் மனநிலையைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். எந்த ஒரு கட்சிக்கும் முழுமையான பெரும்பான்மை வழங்காத மக்கள் தீர்ப்பு, கூட்டணி ஆட்சிக்கான விருப்பத்தைக் காட்டுவதாக அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “2016ஆம் ஆண்டிலேயே கூட்டணி ஆட்சியின் அவசியத்தை விசிக முன்வைத்தது. தற்போது மக்கள் அதையே உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் கூட்டணிகளை மையமாகக் கொண்டு நகரும்” என்று குறிப்பிட்டார். மேலும், மக்களின் தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியல் செய்தியை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து, மக்கள் நலனுக்காக இணைந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இடதுசாரி கட்சிகளுடன் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *