உண்மையான தகவல்களை வழங்குவதில் RTM முக்கிய பங்கு - பிரதமர்
- Surendran Sumdraraj
- 01 Apr, 2026
கோலாலம்பூர், ஏப். 1-
Radio Televisyen Malaysia (RTM) தற்போது மக்களுக்கு உண்மையான, சமநிலையான மற்றும் நம்பகமான தகவல்களை வழங்குவதில் மிக முக்கிய பங்கு வகித்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
வேகமாக மாறிவரும் ஒளிபரப்பு சூழல், உலகின் நிலையற்ற நிலைமை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், RTM தனது பொறுப்பை மதிப்புகளையும் நம்பிக்கையையும் இழக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
“உள்ளூர் திறமைகளை மேம்படுத்தி, கலைஞர்களின் படைப்புகளை உயர்த்தி, தொழில்நுட்பத்தை நெறிப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்திற்கு RTM தொடர்ந்து வழிகாட்டியாக இருக்க வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
RTM தனது 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, மக்களின் குரலாகவும், நாட்டின் இதயத் துடிப்பாகவும் நீண்ட காலமாக செயல்பட்டு வருவதற்காக அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.
Radio Televisyen Malaysia 1946ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வானொலி நிலையமாகத் தொடங்கப்பட்டது. பின்னர், 1963ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி தொலைக்காட்சி ஒளிபரப்பை அறிமுகப்படுத்தியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



