செங்கடல் பாதுகாப்புக்காக விமானந்தாங்கி கப்பலை அனுப்பிய பிரான்ஸ்
- Surendran Sumdraraj
- 07 May, 2026
மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றநிலையைத் தொடர்ந்து, கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரான்ஸ் தனது விமானந்தாங்கி கப்பல் குழுவை செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளுக்கு அனுப்பியுள்ளது.
பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், ஹார்முஸ் நீரிணையில் நிலவும் சூழ்நிலை உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என தெரிவித்துள்ளது. அதேவேளையில், “இந்த மோதலில் பிரான்ஸ் எந்த தரப்பிலும் இல்லை. சர்வதேச சட்டங்களையும் நாடுகளின் இறையாண்மையையும் மதிக்கும் நிலைப்பாட்டில் பிரான்ஸ் தொடர்ந்து உள்ளது” என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் முக்கிய விமானந்தாங்கி கப்பலான “சார்ல்ஸ் டி கோல்” மற்றும் அதனை பாதுகாக்கும் போர்க்கப்பல்கள் நேற்று சூயஸ் கால்வாயைக் கடந்து தெற்கு செங்கடல் நோக்கி பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி 28 முதல் பிரான்ஸ் பாதுகாப்பு அணுகுமுறையின் கீழ் செயல்பட்டு வருவதாகவும், ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் பாதுகாப்பை மீட்டெடுக்க 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து மேற்கொண்டு வரும் பல்தரப்பு முயற்சிகளிலும் பங்கேற்று வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



