பெரிக்காத்தானின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகிய AZMIN ALI!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 30,

பெரிக்காத்தானின் தலைவர் பதவியிலிருந்து Tan Sri Muhyiddin Yassin இன்று காலை விலகுவதாக அறிவித்ததை அடுத்து பெரிக்காத்தான் பொதுச் செயலாளரான DATO SERI AZMIN ALI தலைவரின் வழியே நானும் பெரிக்காத்தானின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். முகைதீன் ஜனவரி 1 முதல் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் நிலையில் தாமும் ஜனவரி 1 முதல் பெரிக்காத்தானின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் சிலாங்கூர் மாநிலப் பெரிக்காத்தான் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

பி.கே.ஆரின் துணைத் தலைவராக இருந்த DATO SERI AZMIN ALI கட்சித் தேர்தலில் RAFIZI RAMLIயிடம் தோல்வி அடைந்ததும் சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். 2020 முகைதீன் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளித்து பி.கே.ஆரிலிருந்து விலகிய DATO SERI AZMIN ALI கடந்த ஆண்டு பெரிக்காத்தானின் பொதுச் செயலாளராக அதன் தலைவர் Tan Sri Muhyiddin Yassin நியமித்தார். பெரிக்காத்தானில் இதுவரையும் தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியுடன் தாம் இருப்பதாக DATO SERI AZMIN ALI அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *