பெரிக்காத்தான் + பாரிசான் கூட்டணி தேவையில்லாத ஆணி! முகைதீன் காட்டம்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 23,

பெரிக்காத்தானும் பாரிசானும் இணைந்து பெரிக்காத்தான் பாரிசான் நேஷனல் எனும் கூட்டணி அமைக்கவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் Datuk Seri Hamzah Zainudin தெரிவித்திருப்பது காய்ந்து போன மரத்தில் அடிக்கும் தேவை இல்லாத ஆணி என முன்னாள் பிரதமரும் பெர்சத்து தலைவருமான Tan Sri Muhyiddin Yassin விமர்சித்துள்ளார். மலேசிய அரசியலின் நிலைமை மேலும் மோசமாகி கொண்டே வருகிறது. அடிப்படை கொள்கையிலேயே எதிராக இருக்கும் பெரிக்காத்தானும் பாரிசானும் கூட்டணி அமைப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என Tan Sri Muhyiddin Yassin வலியுறுத்தினார்.

நான் உருவாக்கிய பெரிக்காத்தான் கூட்டணி தடம் மாறி போகிறது. பாஸ் கட்சி மட்டுமே ஒரு தலைப்பட்சமாகப் பெரிக்காத்தானின் எல்லா முடிவுகளையும் எடுக்கிறது. பெரிக்காத்தானில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளுக்குக் குறிப்பாகப் பெர்சத்துவுக்குத் தகுந்த மரியாதையைக் கொடுக்க பாஸ் கட்சி தவறியதால், நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பெர்சத்துப் பெரிக்காத்தான் கூட்டணியில் இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது என Tan Sri Muhyiddin Yassin விளக்கமளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *