பேராக் & பகாங் மாநிலங்களில் தேர்தலா? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்! பாரிசன் தலைவர் ZAHID HAMIDI பதில்!
- THINAGAREN SANGGAREN
- 16 Nov, 2026
நவம்பர் 16,
பெரிக்காத்தானும் பாரிசானும் இணைந்து மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் பகாங் மாநிலத்திலும் பேராக் மாநிலத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கான சூழல் அமைந்திருப்பதாகத் துணைப் பிரதமரும் பாரிசான் தலைவருமான Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். ஆனால் மாநிலத் தேர்தலை நடத்த பாரிசான் அவசரப்படவில்லை என்றாலும் பகாங் , பேராக் மாநில மெந்திரி பெசார்கள் மாநில ஆட்சியாளர்களுடன் கலந்து எடுக்க வேண்டிய முடிவு இது என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
பகாங் மாநிலத்திலும் பேராக் மாநிலத்திலும் கடந்த 2022 நடைபெற்ற மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பக்காத்தானும் பாரிசானும் இணைந்த ஆட்சி அமைத்தது. 59 சட்டமன்றங்களைக் கொண்டிருக்கும் பேராக்கில் பக்காத்தான் 24 சட்டமன்றங்களிலும் பாரிசான் 9 சட்டமன்றங்களில் பெரிக்காத்தான் 26 சட்டமன்றங்களிலும் வெற்றி பெற்ற பின்னர் பக்காத்தானும் பாரிசான் இணைந்து பேராக் மாநிலத்தில் பாரிசான் தலைமையில் ஆட்சி அமைத்தனர். 42 சட்டமன்றங்களைக் கொண்டிருக்கும் பகாங்கில் பாரிசான் 17 சட்டமன்றங்களிலும் பக்காத்தான் 8 சட்டமன்றங்களிலும் பெரிக்காத்தான் 17 சட்டமன்றங்களிலும் வெற்றிப் பெற்றிருந்த நிலையில் பாரிசானும் பக்காத்தானும் இணைந்து பாரிசான் தலைமையில் ஆட்சி அமைத்தனர்.
ஆனால் தற்போது நடைபெற்ற மலாக்கா , நெகிரி செம்பிலான் ஆகிய இரு மாநிலச் சட்டமன்றத் தேர்தலிலும் பாரிசான் பெரிக்காத்தானுடன் இணைந்து சட்டமன்றத்தில் போட்டியிட்டதால் பகாங் மற்றும் பேராக் மாநிலத்தில் பக்காத்தான் பாரிசான் கூட்டணியின் ஆட்சியில் பிளவு ஏற்பட அதிக வாய்ப்புகள் அமைந்துள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் மீண்டும் தேர்தல் நடத்தப்படுவது குறித்து அம்மாநில மெந்திரி பெசார்கள் முடிவெடுப்பார்கள் என துணைப் பிரதமரும் பாரிசான் தலைவருமான Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

