கூட்டணிக் கட்சிகளால் PERIKATAN எதிர்காலம் தீர்மானிக்கப்படும்! BERSATU, GERAKAN, MIPP கூட்டு அறிக்கை!
- Thinagaren Sanggaren
- 30 Dec, 2025
டிசம்பர் 30,
பெர்சத்து, கெராக்கான், MIPP ஆகிய 3 கட்சிகளின் கருத்துகள் இல்லாமல் பெரிக்காத்தானில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என BERSATU, GERAKAN, MIPP ஆகிய கட்சிகளின் இளைஞர் பிரிவுத் தலைவர்கள் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். முகைதீன் பெரிக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து பெரிக்காத்தானின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அஸ்மின் அலியும் விலகினார். அடுத்தடுத்து தலைவர்கள் பதவி விலகி வரும் நிலையில் BERSATU இளைஞர் பிரிவுத் தலைவர் HILMAN IDHAM, GERAKAN இளைஞர் பிரிவுத் தலைவர் LEE BOON SHIAN, MIPP இளைஞர் பிரிவுத் தலைவர் JUSTIN PRABAKARAN ஆகிய மூவரும் இந்த அறிக்கையை வெளியிட்டடுள்ளனர்.
பெரிக்காத்தானின் சட்ட விதிகளின்படி, அதன் உறுப்புக் கட்சிகளுக்கு எந்தவொரு கருத்தையும் வெளியிட அனுமதியிருந்தாலும் அதன் கூட்டணிக் கட்சியின் தலைமை கூட்டத்தில் அனைத்து உறுப்புக் கட்சிகளின் பங்களிப்புகள் உறுதிச் செய்யப்பட்ட பின்னரே எந்தவோர் இறுதி முடிவும் எடுக்கப்பட வேண்டும் என BERSATU, GERAKAN, MIPP ஆகிய கட்சிகளின் இளைஞர் பிரிவுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இது கட்சியின் அடிப்படை சட்டம் என்பதால் அடுத்து வரும் பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சியின் சந்திப்புக் கூட்டத்தில் மேலதிக பரிந்துரைகளை வெளியிடும்படியும் அங்கே விவாதிக்கும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரிக்காத்தானின் மற்றொரு கூட்டணிக் கட்சியான பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரின் பெயர் தற்போது வெளியான இளைஞர் பிரிவினரின் கூட்டு அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



