பெரிக்காத்தானிலிருந்து வெளியேறுங்கள்! பெர்சத்துவுக்கு HAMZAH கண்டனம்!

top-news

அக்தோபர் 25,

பெரிக்காத்தான் கூட்டணியில் அங்கம் வகிக்கும்  கட்சிகள் கூட்டணியின் தலைமையை மீறி மற்ற கட்சிகளுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளை நடத்தினால் பெரிக்காத்தான் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும் பெரிக்காத்தான் உதவித் தலைவருமான Datuk Seri Hamzah Zainudin வலியுறுத்தினார். பெரிக்காத்தான் கூட்டணிக்கு என தலைமை இருக்கிறது. தேர்தல் கூட்டணிகள் அனைத்தும் பெரிக்காத்தான் தலைமையில் அங்கீகாரத்துடன் நடத்தப்பட வேண்டும் என Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார். 

பெர்சத்துத் தனித்துப் போட்டியிட விரும்பினால் அது பெரிக்காத்தான் கூட்டணியின் விதிகளை மீறுவதாகக் கருதப்படும் என Datuk Seri Hamzah Zainudin எச்சரிக்கை விடுத்தார். நாங்கள் யாரையுன் வெளியேற்றவில்லை. அவர்களாகவே விலகியிருக்கிறார்கள். எங்களை எதிர்ப்பதாக நினைத்து அவர்கள் பாழங்குழியில் விழுவது மட்டுமல்லாது பெரிக்காத்தானையும் இழுத்துச் செல்கிறார்கள் என Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார். முன்னதாக மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தானுடன் பெர்சத்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக வெளிவந்துள்ள செய்திகளையும் Datuk Seri Hamzah Zainudin சுட்டிக்காட்டினார். எதிரிகளுடன் கைக்கோர்த்து நண்பர்களை அழிக்க வேண்டாம் என Datuk Seri Hamzah Zainudin கேட்டுக்கொண்டார்,

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்