பேராக்கில் இனி பெரிக்காத்தான் இல்லை! நானும் வெளியேறுகிறேன்! FAIZAL AZUMU!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 30,

பெரிக்காத்தானின் தலைவர் பதவியிலிருந்து Tan Sri Muhyiddin Yassin இன்று காலை விலகுவதாக அறிவித்ததை அடுத்து பெரிக்காத்தானின் பேராக் மாநிலத் தலைவரும் பெர்சத்து உதவித் தலைவருமான DATO SERI AHMAD FAIZAL AZUMU பெரிக்காத்தானில் தாம் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து விலகுகவதாக அறிவித்தார். பெரிக்காத்தானின் பேராக் மாநிலத் தலைவராக இருந்த DATO SERI AHMAD FAIZAL AZUMU ஜனவரி 1 முதல் தாம் அந்த பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

2016 பாரிசானிலிருந்து விலகி பக்காத்தானில் இணைந்த FAIZAL AZUMU, 2018 முதல் 2020 வரையில் பேராக் மாநில மெந்திரி பெசாராகப் பொறுப்பிலிருந்தார். 2021-இல் பக்காத்தான் ஆட்சிக் கலைக்கப்பட்ட போது முகைதீனுக்கு ஆதரவளித்த FAIZAL AZUMU பக்காத்தானிலிருந்து விலகி, பெர்சத்துவில் இணைந்து இளைஞர் விளையாட்டு அமைச்சராகவும் பொறுப்பிலிருந்தார். கடந்த 2022 பொதுத்தேர்தலில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாரை எதிர்த்து தம்பூன் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு 3,736 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *