பெரிக்காத்தானின் அடுத்த தலைவர் குறித்து பாஸ் கட்சியிடம் கேளுங்கள்! – HAMZAH ZAINUDDIN

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 23,

பெரிக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து முகைதீன் விலகியதைத் தொடர்ந்து அடுத்தத் தலைவர் யார் என்பதை அறிவிக்க வேண்டிய பொறுப்பு கட்சியின் செயலவைக்கு மட்டுமே உள்ளது என எதிர்கட்சித் தலைவரும் பெரிக்காத்தான் உதவித் தலைவருமான Datuk Seri Hamzah Zainuddin தெரிவித்தார். பெரிக்காத்தான் தலைமையை ஏற்கும்படி என்னிடம் இதுவரை யாரும் கேட்கவில்லை. அப்படியே கேட்டால் என் பதிலை அவர்களிடம் நான் தெரிவிப்பேன் என Datuk Seri Hamzah Zainuddin தெரிவித்தார். 

பெரிக்காத்தானின் தலைவர் பதவி விலகியதும் அடுத்த தலைவரைப் பொதுச்செயலாளர் அறிவிக்க வேண்டும். ஆனால் பொதுச் செயலாளரான AZMIN ALI யும் பதவி விலகிவிட்டார். ஆனால் துணைப் பொதுச் செயலாளர் பாஸ் கட்சியின் Datuk Seri Takiyuddin Hassan இன்னும் பதவியில் இருக்கிறார். ஆகையால் அடுத்த தலைவர் நியமனத்தைப் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் பெரிக்காத்தானின் துணைப் பொதுச் செயலாளருமாக இருக்கும் Datuk Seri Takiyuddin Hassan அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என Datuk Seri Hamzah Zainuddin தெரிவித்தார். உண்மையில் அடுத்த பெரிக்காத்தான் தலைவரை அறிவிக்கும் பொறுப்பு பாஸ் கட்சியிடம் தான் இருக்கிறது என்றும் எனக்கு தெரியாது என்றும் Datuk Seri Hamzah Zainuddin தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *