பொதுத்தேர்தல் வரை பொறுமையாக இருப்போம்! பெரிக்காத்தானுக்குக் கெராக்கான் அறிவுரை!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 30,

பெரிக்காத்தானின் முக்கிய தலைவர்களின் ராஜினாமா வருத்தமளிக்கும் வகையில் உள்ளதாகக் கெராக்கான் தலைவரும் பெரிக்காத்தான் உதவித் தலைவருமான Datuk Dr Dominic Lau தெரிவித்துள்ளார். பெர்லிஸில் ஆட்சிக் கவிழ்ப்பு சம்பவம் முதல் இப்போது பெரிக்காத்தான் தலைவர்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்தாலும் நம் இலக்கு அடுத்த பொதுத்தேர்தல் என்பதை நிலைநிறுத்த வேண்டும் என Datuk Dr Dominic Lau கேட்டுக்கொண்டார். 

பெரிக்காத்தான் கூட்டணி ஒரு வலுவான எதிர்கட்சியாக மட்டுமே இருந்துவிட்டு கலைக்கப்பட்டு விட கூடாது. அடுத்த பொதுத்தேர்தலில் நாம் ஒரே கூட்டணியாக இருந்தால் மட்டுமே ஆட்சியை அமைக்க பெரும்பான்மையும் நமக்கு கிடைக்கும். இது ஒரு சிக்கல் என்றாலும் பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டத்தில் இந்த முரண்களை முதிர்ச்சியுடன் நாம் கையாள வேண்டும் என Datuk Dr Dominic Lau வலியுறுத்தினார். நமக்குள் நாம் நேரடியாக விவாதிப்போம். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் நாம் பொறுப்பேற்போம். அடுத்த பொதுத்தேர்தல் வரையும் நாம் அனைவரும் பொறுமையாக இருப்போம் என கெராக்கான் தலைவரும் பெரிக்காத்தான் உதவித் தலைவருமான Datuk Dr Dominic Lau பெரிக்காத்தான் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *