பெரிக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து முகைதீன் ராஜினாமா!
- Thinagaren Sanggaren
- 30 Dec, 2025
டிசம்பர் 30,
பாஸ் & பெர்சத்து கூட்டணிக் கட்சியான பெரிக்காத்தான் கூட்டணித் தலைவரான முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அதன் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பெர்சத்துவின் தலைவராகவும் இருக்கும் முகைதீன் நாட்டின் எதிர்க்கட்சியான பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவர் பொறுப்பிலிருந்து ஜனவரி 1 முதல் விலக விருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பெர்சத்து உறுப்பினர்கள் சிலர் முகைதீனைப் பெர்சத்து தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில் இன்று காலை முகைதீன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 1 வாரமாகக் கூட்டணி கட்சியானப் பாஸ் கட்சி பெரிக்காத்தான் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாலும் , குறிப்பாகப் பெர்லிஸ் மாநிலத்தின் ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பெர்சத்து முக்கிய காரணமாக இருந்ததால் முகைதீனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



