தேர்தலை எதிர்கொள்ள பெரிக்காத்தான் தயார்! தக்கியுடீன் ஹசான் உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 25 Mar, 2026
மார்ச் 25,
தேர்தலை எதிர்நோக்க பெரிக்காத்தான் கூட்டணி தயாராக இருப்பதாகப் பெரிக்காத்தான் பொதுச் செயலாளர் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார். அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் காலம் இருந்தாலும் மலாக்கா, ஜொகூர் ஆகிய இரு மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ள பெரிக்காத்தான் உறுதியாக இருப்பதாகவும் ஒரு சில மாநிலங்களுக்குப் பெரிக்காத்தானின் மாநிலப் பொறுப்பாளர்கள் நியமிக்க பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகளான பாஸ், பெர்சத்து, கெராக்கான், MIPP ஆகிய கட்சிகளின் ஒத்துழைப்புடன் வேட்பாளர்களைப் பெரிக்காத்தான் தலைமை இறுதி செய்வதாகவும் மாநிலப் பொறுப்பாளர்கள் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்மொழிந்து வருவதாகவும் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் வேட்பாளர்களின் நியமனங்கள் இவ்வாண்டுக்குள் உறுதிச் செய்யப்படும் என்றும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக இப்போதே களப்பணியில் அதன் வேட்பாளர்கள் செயல்பட தொடங்கவிருப்பதாகவும் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார். குறிப்பாக வேட்பாளர்களின் நியமனங்கள் தன்னிச்சையாக முடிவு செய்யப்படாமல், பெரிக்காத்தான் தலைமையின் கலந்துரையாடலுக்குப் பின் உறுதிச் செய்யப்படும் என்பதில் பெரிக்காத்தான் தெளிவாக இருப்பதாகவும் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



