பெரிக்காத்தானுடன் பயணிக்க முடியாது! வெளியேறிய உறுப்புக் கட்சி!

- Sangeetha K Loganathan
- 14 Dec, 2024
டிசம்பர் 14,
பெரிக்காத்தானிலிருந்து வெளியேறுவதாக சபா முன்னேற்றக் கட்சியான SAPP இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. சபா முன்னேற்றக் கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் இனியும் பெரிக்காத்தான் கூட்டணியுடன் பயணிக்க முடியாது என உச்சமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக முடிவெடுத்தாக அதன் தலைவர் Datuk Seri Yong Teck Lee இன்று தெரிவித்தார்.
சபா மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் அதன் எல்லையை மீறி கூட்டணி கட்சிகளைக் கட்டுப்படுத்தபவதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக் Datuk Seri Yong Teck Lee தெரிவித்தார். மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், சபா முன்னேற்றக் கட்சி பிற மாநிலங்களில் போட்டியிட முடியாது என்பதால் பிற மாநிலத் தேர்தல்களிலும் பிற மாநில நாடாளுமன்றத் தேர்தல்கள் குறித்தும் நாங்கள் பெரிக்காத்தானுக்கு அறிவுரையோ கருத்தோ தெரிவிப்பதில்லை. ஆனால் சபாவில் எங்கள் கட்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதைப் பெரிக்கத்தான் ஏற்காததால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் இன்று தெரிவித்தார்.
Sabah Progressive Party (SAPP) secara rasmi keluar dari Perikatan Nasional, kata Presidennya Datuk Seri Yong Teck Lee. Keputusan itu dibuat kerana Perikatan Nasional gagal memberi keutamaan kepada parti negeri dalam pilihan raya Sabah, melanggar sempadan persefahaman mereka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *