பல்லின ஒற்றுமையே மலாக்காவின் பலம் – முதலமைச்சர் அபு ரவுப்
- Surendran Sumdraraj
- 04 Mar, 2026
மலாக்கா, மார்ச் 4-
மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் அடிப்படையாக, ம்லாக்கா தொடர்ந்து ஒற்றுமையின் பாதையைத் தேர்ந்தெடுத்து பல்வகைமையை கொண்டாடி வருகிறது என்று ம்லாக்கா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அபு ரவுப் யூசோப் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், மொழி வேறுபாடுகள் அல்லது கலாச்சார மரபுகள் மக்கள் ஒன்றுபடுவதற்கான தடையாக இல்லையெனவும், மாறாக அது மாநிலத்தின் பலத்தை அதிகரிக்கும் முக்கிய அம்சமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மலாக்காவில் வாழும் மக்கள் பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அனைவரும் ஒரே அடையாளத்துடன் “மலாக்கா மக்கள்” என்ற பெருமையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.
இந்த ஒற்றுமை உணர்வே சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்கான முக்கிய தூணாக இருந்து வருகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



