மத நம்பிக்கையை இழிவுப்படுத்துவது காட்டுமிராண்டித்தனமானது! – ஒற்றுமை துறை துணை அமைச்சர் கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 1,

பிற மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்தும் செயல் காட்டுமிராண்டித்தனமானது என ஒற்றுமை துறை துணை அமைச்சர் YUNESWARAN கண்டனத்தைத் தெரிவித்தார். இன மத சமயம் குறித்து தீங்கிழைக்கும் இழிவுப்படுத்தும் நபர்களுக்கு எதிராகச் செயல்படும் நடவடிக்கைகள் குறித்து அரசு மேலும் அதிகமாகச் செயல்படும் என்றும் துணை அமைச்சர் YUNESWARAN தெரிவித்தார். இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், இந்து மதம், சீக்கியம் என எந்தவொரு மத நம்பிக்கைக்கும் எதிராகச் செயல்படும் நபர்களுக்கு அரசியல் நோக்கமோ தனிப்பட்ட சுயநலமோ மட்டுமே காரணமாக இருக்கும் என துணை அமைச்சர் YUNESWARAN தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட தரப்பினர் மீது அரசு கண்மூடித்தனமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது. ஆனால் வெளிப்படையான நியாயமான விசாரணையை மேற்கொள்ளும் என்பது மட்டும் உறுதி என துணை அமைச்சர் யுனேஸ்வரன் நம்பிக்கை அளித்தார். இது போன்ற பதிவுகளைச் சமூகவலைத்தலங்களில் பரப்பும் தரப்பினருக்கு எதிராகத் தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC கண்காணிக்க வேண்டும் என்றும் போலியானச் சமூக வலைத்தலங்களை நீக்க வேண்டும் என்றும் துணை அமைச்சர் யுனேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *