தொகுதி மறுசீரமைப்பு: 8 ஆண்டுக் காலவரம்புக்குப் பிறகே SPR முடிவு

top-news

கோலாலம்பூர், ஜன. 21-

தேர்தல் தொகுதிகளின் மறுசீரமைப்பு (persempadanan semula) தொடர்பான எந்தவொரு முடிவும், எட்டு ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பு (lat tempoh) முடிவடைந்த பின்னரே மலேசிய தேர்தல் ஆணையம் (SPR) மூலம் தீர்மானிக்கப்படும் என்று பிரதமர் துறையின் அமைச்சர் (சட்டம், நிறுவன சீர்திருத்தம்) டத்தோ ஸ்ரீ அசலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.

நடப்பு தேர்தல் தொகுதிகளின் மறுஆய்வு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (DUN) எண்ணிக்கையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே மீண்டும் நடத்தப்படும் என்றும் அவர் விளக்கினார். இதன் மூலம், தொகுதி அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் அரசியல்,  சட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய முடியும் என அவர் கூறினார்.

“ தீபகற்ப மலேசியாவில் கடந்த முறையாக மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு ஆய்வுக்கான எட்டு ஆண்டுக் காலவரம்பு, வருகிற மார்ச் 9 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்தக் காலவரம்பு முடிந்த பின்னரே, தொகுதி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்த எந்தவொரு முடிவையும் SPR எடுக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *