அனைத்துலகப் புத்தக கண்காட்சியில் தமிழ் நூல் வெளியீடு!
- THINAGAREN SANGGAREN
- 30 May, 2026
மே 30,
உலக வர்த்தக வணிக மையத்தில் தற்போது அனைத்துலகப் புத்தக கண்காட்சி மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தக கூடங்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனையில் உள்ளன.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் நேற்று இந்த அனைத்துலக புத்தக கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்த அனைத்துலக புத்தக கண்காட்சியில் பல நூல்கள் வெளியீடு கண்டு வரும் நிலையில், அவற்றில் ஒரே தமிழ் சார்ந்த ஆய்வு நூலான THE ART OF BALANCE HOLISTIC VISION OF WELL-BEING எனும் திருக்குறள் ஆய்வு நூல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
மலாயாப் பல்கலைக்கழக, மொழி மொழியியல் புலத்தின்
முனைவர் செல்வஜோதி இராமலிங்கம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் முனைவர் அனுராதா ராஜசேகரம் ஆகிய இரு தமிழ் விரிவுரையாளர்களும் இணைந்து THE ART OF BALANCE HOLISTIC VISION OF WELL-BEING எனும் திருக்குறள் ஆய்வு நூலை இயற்றியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



