பட்டப்பகலில் பாலியல் தொழில்! 112 பெண்கள் கைது! – PETALING STREET!
- Thinagaren Sanggaren
- 08 Dec, 2025
டிசம்பர் 8,
தலைநகரின் பிரபல வணிகத்தலமான PETALING STREET வணிகத்தலத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 112 பெண்கள் உட்பட 139 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலை 6 மணி முதல் 11.30 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் PETALING STREET-இல் உள்ள 13 வணிகக் கடைகளைச் சோதனையிட்டதாகவும் 20 முதல் 65 வயதுக்குற்பட்ட 27 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
பட்டப்பகலிலேயே பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக Indonesia, Myanmar, Bangladesh, India, Nepal , Sri Lanka ஆகிய நாடுகளைச் சேர்ந்த 112 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் 20 முதல் 35 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட பாலியல் தொழில் வளாககங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும் 1 மணி நேரப் பாலியல் சேவைக்கு RM60 ரிங்கிட் முதல் RM300 வரையில் வசூலிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



