சான் சோ லின் அருகே LRT தடம் புரண்ட சம்பவம் - 30 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
- Surendran Sumdraraj
- 29 May, 2026
கோலாலம்பூர், மே 29-
சான் சோ லின் (Chan Sow Lin) நிலையம் அருகே நேற்று ஏற்பட்ட இலகு ரயில் போக்குவரத்து (LRT) தடம் புரண்ட சம்பவம் தொடர்பாக, சுயாதீன சிறப்பு விசாரணைக் குழுவுக்கு 30 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்காக சுயாதீன விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உயிரிழப்போ காயமோ ஏற்படாத போதிலும், இது மிகவும் தீவிரமான சம்பவமாக கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“பொதுவாக ரயில் சேவை தடங்கல்கள் ஏற்பட்டால் Prasarana Malaysia Berhad (Prasarana) உள்நாட்டில் விசாரணை நடத்தும். ஆனால் இவ்வாறான சம்பவம் சுயாதீனமாக விசாரிக்கப்பட வேண்டும். உண்மையான காரணம் கண்டறியப்பட்டு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும்,” என்று Anthony Loke தெரிவித்தார்.
இந்த விசாரணையில் ரயில் இயக்க முறை, பாதுகாப்பு பூட்டல் அமைப்பு (locking system), கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடு, சிக்னல் அமைப்பு, சம்பவ நேரத்தில் பணியில் இருந்த ஊழியர்களின் செயல்பாடு மற்றும் ரயில் கையாளும் நடைமுறைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஆராயப்படவுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



