மத்திய கிழக்கு மோதலுக்கிடையிலும் 2026 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும் – FIFA

top-news
FREE WEBSITE AD

அமெரிக்கா, மார்ச் 10-

மத்திய கிழக்கில்  தொடரும் பதற்றம் மற்றும் போர் சூழ்நிலையின்போதும், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று FIFA அமைப்பின் செயல்பாட்டு தலைவர் ஹெய்மோ ஷிர்கி தெரிவித்துள்ளார்.

டல்லாஸில் அமைந்துள்ள சர்வதேச ஒளிபரப்பு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகக் கோப்பை போட்டி மிகவும் பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்வாக இருப்பதால் அதை ஒத்திவைப்பது சாத்தியமில்லை என்று வலியுறுத்தினார்.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணமாக, அந்த நாட்டின் உலகக் கோப்பை பங்கேற்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

“ஒரு கட்டத்தில் இதற்கான தீர்வு கண்டுபிடிக்கப்படும். உலகக் கோப்பை போட்டி நிச்சயமாக தொடரும்,” என்று டல்லாஸ்  கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கோப்பை என்பது உலகளாவிய முக்கியமான விளையாட்டு விழாவாக இருப்பதால், ஏற்கனவே தகுதி பெற்றுள்ள அனைத்து நாடுகளும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

2026 உலகக் கோப்பை போட்டி அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *