84 ஆவது பரதன் கால்பந்து கிண்ணம்!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 24,

மலேசியாவின் வரலாற்றுப்பூர்வக் கால்பந்துச் சுழற்கிண்ணமானப் பரதன் கால்பந்து சுழற்கிண்ணம் 84 ஆவது ஆண்டாக இன்று செலாயாங் கால்பந்து மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி சிறப்பு வருகையளித்து இறுதி ஆட்டத்தைக் கண்டு மகிழ்ந்தார். 



84 ஆவது பரதன் சுழற்கிண்ணக் கால்பந்தின் வெற்றியாளராக திராங்கானு அணி வெற்றிப் பெற்றது. இறுதியாட்டத்தில் நெகிரி செம்பிலான் அணியைத் திரங்கானு அணி 1 க்குச் சுழியம் என வீழ்த்தி வெற்றி பெற்றது. 



திரங்கானு அணியின் ஒரே கோலை, 9 எண் விளையாட்டாளர் இளங்கேஸ்வரன் அடித்தார். இரண்டாவது நிலையில் நெகிரி செம்பிலான் அணி வெற்றி பெற்ற நிலையில் மலாக்கா அணி மூன்றாம் நிலையிலும், நான்காவது நிலையில் புத்ராஜெயா அணியும் வாகை சூடினர். 



ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கிண்ணத்தையும் பரிசுகளையும் எடுத்து வழங்கினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *