கோயிலுக்காக இணைந்திருக்கும் PKR,DAP,MIC இந்திய தலைவர்கள்!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 27,

மடானி அரசாங்கத்தில் இருக்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் செனட்டர்களும் கோயில் விவகாரங்களுக்குச் சட்டப்படி ஏற்படுத்த வேண்டிய தீர்வுகள் குறித்து கலந்தாலோசனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் துறையின் சட்ட நிர்வாகச் சீர்த்திருத்தத் துணை அமைச்சர் குலசேகரன் தலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் செனர்ட்டர்களும் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் பொறுப்பாளர்களுடன் பி.கே.ஆர், டி.ஏ.பி, ம.இ.கா ஆகிய கட்சிகளின் இந்திய தலைவர்கள் பங்கேற்றனர். அரசாங்கம் அமைத்திருக்கும் சட்டத்தை மீறி அரசு அல்லது தனியார் நிலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் கோயில்கள் குறித்தும் முழுமையான சட்டத் தெளிவுகளும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மலேசியாவில் உள்ள கோயில்களுக்கு எதிராகப் பரப்பப்படும் பிரச்சாரங்களும் அரசாங்கத்தில் இருக்கும் பெரும்பாலான இந்திய தலைவர்கள் அமைதியாக இருப்பதாக இந்து கோயில்களுக்கான தன்னார்வ அமைப்பு முன்னதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *