பி.கே.ஆரின் சுயநலக் கூட்டம் ஒழியட்டும்! JOHOR P.K.R தலைவர் காட்டம்!

top-news
FREE WEBSITE AD

மே 24,

ஜொகூர் பி.கே.ஆர் உறுப்பினர்களில் சிலர் பெர்சாமா கட்சிக்குத் தாவியதால் பி.கே.ஆர் முடங்கி விடாது என முன்னாள் அமைச்சரும் ஜொகூர் மாநில பி.கே.ஆர் கட்சியின் தலைவருமான Datuk Seri Dr Zaliha Mustafa விளக்கமளித்தார். ஜொகூர் பி.கே.ஆரிலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 2,800 பேர் பெர்சாமா கட்சியில் இணைந்ததாக இருந்தால், அது அவர்களின் சுயநலம் என Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார்.

எந்தவொரு தனி நபரின் அரசியல் நகர்வுகளைக் குறித்தும் கருத்துகள் வெளியிட கூடாது என்றாலும் பக்குவமற்ற ஒரு சிலரிடமிருந்து பி.கே.ஆர் விடுதலை பெற்றுள்ளதாக Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார். தனிப்பட்ட ஒரு சிலரின் எண்ணங்களுக்காக ஒரு கட்சி செயல்படாது. பி.கே.ஆர் இதைவிட பெரிய பிரச்சனைகளையும் சந்தித்து எதிர்த்துப் போராடியிருக்கிறது. அவர்களுடைய பாதையை அவர்கள் தீர்மானித்துள்ளனர். ஜொகூரில் பி.கே.ஆர் வலுவாகவே உள்ளது என்றும் குறிப்பிட்ட ஒரு சிலர் வெளியேறுவதால் கட்சி காலியாகிடாது என Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜொகூர் பி.கே.ஆரின் முக்கிய தலைவர்களுடன் தீராம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரான கோபாலகிருஷ்ணன் பி.கே.ஆர் கட்சியிலிருந்து விலகி, ரபீசி ரம்லி தலைமையிலான பெர்சாமா கட்சியில் இணைந்தனர். தற்போது ஜொகூர் மாநில பெர்சாமா கட்சியில் 2,800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்திருப்பதாகவும் பி.கே.ஆரிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைவதாகவும் தெரிய வந்துள்ளது


.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *