பி.கே.ஆரில் மாற்றம் தேவை! பி.கே.ஆர் மூத்தத் தலைவர் HASSAN KARIM!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 5,

கடந்த ஜொகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களில் பி.கே.ஆர் அடைந்த தோல்வி ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என பி.கே.ஆரின் தோற்றுநர்களில் ஒருவரும் PASIR GUDANG நாடாளுமன்றத் தலைவருமான Hassan Abdul Karim எச்சரிக்கை விடுத்தார். கடந்த பொதுத் தேர்தலில் அம்னோவுக்கு இல்லாத ஆதரவு இப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது என்றால் அது பி.கே.ஆர் செய்த தவறு என Hassan Abdul Karim சுட்டிக்காட்டினார். 

பி.கே.ஆரின் நிர்வாகத்துவத்தில் மாற்றங்கள் நிகழ்த்தப்பட வேண்டும் என Hassan Abdul Karim வலியுறுத்தினார். ஆட்சியில் அமர்ந்ததும் மக்களிடமிருந்து பி.கே.ஆர் தொலைவாகச் சென்று விட்டதாகவும் முந்தைய காலங்களில் பி.கே.ஆர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் இலகுவாகச் சென்று பார்த்தனர். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஆட்சி அதிகாரம், அரசு பணிகள் என பி.கே.ஆரின் முக்கியத் தலைவர்கள் செயல்படுவதால், அடிமட்டத்தில் இருக்கும் மக்களைச் சந்திக்கும் வாய்ப்பை அவர்கள் இழந்து விட்டனர் என Hassan Abdul Karim தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *