டத்தோ ஸ்ரீ ரபிசி ரம்லி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – PKR தலைமையிடம் கோரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 31-

கட்சி புகழுக்கும் நிலைத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் டத்தோ ஸ்ரீ ரபிசி ரம்லி வெளியிட்டதாகக் கூறப்படும்  கருத்துகளைத் தொடர்ந்து, அவர்மீது கடுமையான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என PKR தலைமையிடம் சரவாக் மாநில கெஅடிலான் தலைமை மன்ற செயலாளர் மாமுட் எபா தெரிவித்ததார்.

 முன்னாள் துணைத் தலைவர் ரபிசியின் அண்மைய செயல்பாடுகள் எளிதில் புறக்கணிக்க முடியாதவை என்றும், அவை கட்சியின் சீர்திருத்த முயற்சிகளைப் பாதிக்கின்றன என்றும் கூறினார்.

மேலும், இத்தகைய நடவடிக்கைகள் அடிமட்ட உறுப்பினர்களிடையே குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, PKR தலைமையினர் கட்சியின் கண்ணியத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“ரபிசியின் சமீபத்திய கருத்துகள் மற்றும் நடவடிக்கைகள் மிகவும் கவலைக்கிடமானவை. அவை PKR கட்சியின் நற்பெயரை பாதிப்பதோடு, சீர்திருத்த முயற்சிகளையும் குலைக்கும் வகையில் உள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *