பி.கே.ஆர் முதியோரின் கூடாரம்! இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை! RAFIZI குற்றச்சாட்டு!
- THINAGAREN SANGGAREN
- 17 Jun, 2026
ஜூன் 17,
பி.கே.ஆர் கட்சி முதியவர்களின் கூடாரம் என்றும் இளைஞர்களின் குரலுக்கான அங்கீகாரம் கொடுக்காத கட்சி என்றும் BERSAMA கட்சித் தலைவரான Datuk Seri Rafizi Ramli குற்றம் சாட்டினார். பி.கே.ஆரில் அங்கீகரிக்கப்படாத பலர் எங்கு செல்வது என தெரியாமல் இருந்தனர். ஆனால் இப்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக BERSAMA கட்சி இருக்கிறது என பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவருமான Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.
பி.கே.ஆர் கட்சியின் பொறுப்பிலிருக்கும் பெரும்பாலானவர்கள் முதியவர்கள். இளைஞர்களை அங்கீகரிக்க தவறிவிட்டார்கள். பி.கே.ஆரின் இளைஞர் பிரிவில் மட்டுமே இளைஞர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அதைத் தவிர கட்சியின் முடிவுகள் குறித்து கலந்துரையாட கூட இளைஞர்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை என Datuk Seri Rafizi Ramli வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இதை நானே பி.கே.ஆரில் நேரடியாகப் பார்த்துள்ளேன். அதே தவற்றை BERSAMA கட்சியில் நடக்க நான் விட மாட்டேன் என Datuk Seri Rafizi Ramli பெர்சாமா கட்சியின் இளைஞர்களுக்கு உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



